சீனாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: காங்கிரஸ் கட்சிக்குள்ளையே மூத்த தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்களால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 வீதம் வரிவித்துள்ளார். இதன்காரணமாகி இரு நாடுகளுக்குமிடையில் உறவு சீர்குலைந்துள்ளது. இதனால் வர்த்தகப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் நடந்த ஷாங்காய் மாநாடுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சீன திபர் மற்றும் ரஷ்யா அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், சீனாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய - சீனா உறவில் முறுகல் நிலவி வந்தது. குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போதும், பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ மற்றும் தார்மீக ஆதரவு அளித்தது. இதன் காரணமாக மேலும், இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

அத்துடன் சீனாவில் இருந்து சில முக்கியப் பொருட்களை இந்தியாவுக்கு வழங்குவதை சீனா நிறுத்தியது. ஃபாக்ஸ்கான் ஆலையில் இருந்து தனது பொறியாளர்களைத் திரும்பப் பெற்றது போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிற்குப் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுத்தியது. 

அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய வர்த்தகத்தில் பதற்றம் நிலவும் இந்தச் சூழலில் பிரதமர் மோடி ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொண்டு, அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியதை காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது சீனாவிடம் கோழைத்தனமாக அடிபணிந்த செயல் என்றும், பாகிஸ்தான் - சீனா கூட்டணியை மோடி கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பயந்து, ஒன்றிய பாஜக அரசு எதிரி நாடான சீனாவிடம் தஞ்சம் புகுந்துள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான சசி தரூர், இதற்கு மாறுபட்ட கருத்தைத் வழமைபோல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அமெரிக்காவுடனான உறவு மோசமடைந்துள்ளது. இந்தநிலையில், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சமநிலையை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கையாகும் என்று கூறியுள்ளார்.

மேலும், இரு பெரும் வல்லரசு நாடுகளுடனும் நாம் பகைமையைப் பாராட்ட முடியாது என்றும், சீனாவுடன் இந்த இக்கட்டான சூழலில் உறவைப் பேண வேண்டியது அவசியம் என்றும், தேசிய நலன் என்று வரும்போது ஒன்றிய அரசு தனது நிலையில் உறுதியாக நிற்கும் என்று நம்புவதாக சசி தருர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களான சல்மான் குர்ஷித் மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் குறிப்பிடுகையில், அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்காக, உடனடியாக சீனா பக்கம் சாயும் திடீர் வெளியுறவுக் கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும், சீனாவை முழுமையாக நம்ப முடியாது என்றும், உலகளாவிய இந்த மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு மிகவும் கவனமாகத் தனது வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  அமெரிக்காவை மட்டுமே நம்பியிருந்தது, இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிழை; தற்போது சீனா மற்றும் ரஷ்யாவுடன் உறவைப் பலப்படுத்துவது சரியான பாதை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. காங்கிரசுக்குள் மூத்த தலைவர்கள் சிலர் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து இருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is a stir within the Congress party due to the differing views of senior leaders regarding Prime Minister Modi talks with China


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->