சீக்கிரமாக குட் நியூஸ் வரும்: 'அமெரிக்கா வரிவிதிப்பால் நஷ்டமடைபவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்'; நிர்மலா சீதாராமன்..!
Nirmala Sitharaman says good news will come soon regarding US taxation
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதித்துள்ள 50% வரியால்பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும், விரைவில் நல்ல செய்தி வரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்தியா பொருளாதார ரீதியாக பின்னடைவாகியுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று சென்னையில் நிருபர்கள் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துள்ளதாவது:
மத்திய அரசு சார்பாக ஏற்றுமதி செய்யும் அனைத்து துறையினர் உடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், டில்லியிலும்அவரை சந்தித்தாக கூறியுள்ளார். அத்துடன், மத்திய அரசு சார்பில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு சொல்ல விரும்புவது, மத்திய அரசு சார்பில் கோவிட் போன்ற அந்த சந்தர்ப்பத்திலும் கூட தொழிலில் இருப்பவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, ஒரு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்த தொழிலும் மூடப்படாத வகையில் திட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு உதவியாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் கஷ்டப்படும் எல்லாருக்குகாகவும் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சீக்கிரமாக ஏற்றுமதி செய்யும் அனைவருக்கும் நல்ல அறிவிப்பு வரும் என்றும், அமெரிக்கா விதித்த வரியால் நஷ்டமடைபவர்களுக்கு உதவியாக நாங்கள் இருப்போம் என்றும் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
English Summary
Nirmala Sitharaman says good news will come soon regarding US taxation