இறுதி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்..? நடந்தது என்ன..?
Actress Nivetha Pethuraj called off her wedding at the last minute
தமிழ் திரையுலகின் பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன், உதயநிதியின் பொதுவாக எம் மனசு தங்கம், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடத்துள்ளார்.
துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. முதலில் ரகசியமாக இருந்த இந்த நிச்சயதார்த்தம் பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து அதை முடிந்ததை உறுதி செய்தனர்.

அத்துடன், இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஜ் ஹீத் இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து அந்த புகைப்படங்களை தற்போது நீக்கியுள்ளனர். அத்துடன், இருவரும் ஒருவரை ஒருவர் unfollow செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருமணம் நின்றுபோனதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
English Summary
Actress Nivetha Pethuraj called off her wedding at the last minute