பிரபல கால்பந்து வீரருடன் 13 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, கள்ளக்காதல், காதலன் என 03 ஆண்களாலும் திருப்தியடையாத நிலையில் 04-வது துணையை தேடும் பிரபல நடிகை..! - Seithipunal
Seithipunal


'கொரோனேஷன் ஸ்ட்ரீட்' என்ற டிவி தொடரின் நடிகை ஹெலன் பிளானகன் (35). இவர் தனது 19 வயது முதல் 32 வயது வரை பிரபல கால்பந்து வீரர் ஸ்காட் சின்க்லேயர் என்பவருடன் 13 ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த ஜோடி பிரிந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு இறுதியில் டேவிட் ஹே என்பவருடன் ஹெலன் பிளானகன் சில காலம் கள்ளக்காதலில் இருந்தார்.

அதன் பின்னர் முன்னாள் கால்பந்து வீரர் ராபி டால்போட் என்பவரை காதலித்து வந்தார். அந்த உறவும் கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது தனியாக வசித்து வரும் ஹெலன் பிளானகன், இன்றைய கால கட்டத்தில் ஒரு சரியான துணையை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தனது காதல் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது 'தான் ஒரு நடிகையாக இருப்பதால் சாதாரண மனிதர்களைப் போல என்னால் பொது இடங்களில் சுதந்திரமாக யாரையும் சந்திக்க முடிவதில்லை. என்னை சந்திப்பவர்கள் ‘நடிகை ஹெலன்’ என்று தான் பார்க்கிறார்களே தவிர, ஒரு தனி மனிதராக என்னைப் புரிந்து கொள்ள முன்வருவதில்லை. சிலர் எனது புகழைப் பயன்படுத்தி ஆதாயம் தேட நினைக்கிறார்கள். இதனால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன்.'' என்று வேதனையாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் கால்பந்து வீரர்களுடன் பழகிய அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது, இனிமேல் கால்பந்து வீரர்களை காதலிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். மேலும், 'எனது மன நலனுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒருவரைத் தேடி வருகிறேன். அதேபோல், ஒரு உறவுமுறை எனக்கு முழு திருப்தியையும் நம்பிக்கையையும் தரும் வரை, எனது குழந்தைகளிடம் அந்த நபரை அறிமுகப்படுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous Actress Helen Flanagan Seeks a Fourth Partner After Living with Three Men


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->