துணை முதல்வர் பதவி யாருக்கு? – பாஜகவுக்குள் ஆரம்பித்த ‘பவர்’ போட்டி!நாக்பூர் ரூட்டில் எடப்பாடிக்கு செக்! கேம் அப்படியே மாறுது?
Who will be the Deputy Chief Minister The power race has begun within the BJP Check for Edappadi on the Nagpur route Is the game changing
தமிழக அரசியல் சூடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாஜகவுக்குள் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம் துணை முதல்வர் பதவி குறித்த போட்டிதான். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் உரிய பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பாஜக மேலிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, துணை முதல்வர் பதவியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பதவி யாருக்கு என்ற கேள்வியே தற்போது கட்சிக்குள் மோதலை உருவாக்கியுள்ளது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பதவிக்கான முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார். தென் மாவட்டங்களில் தனக்கென வாக்கு வங்கி இருப்பது, முன்னாள் அமைச்சராக இருந்த அனுபவம் போன்றவற்றை முன்வைத்து அவர் தனது ஆதரவை டெல்லி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் வலுப்படுத்த முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
மறுபுறம், வானதி சீனிவாசனும் இந்த பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளார். தேசிய அளவில் கட்சிப் பதவி வகித்த அனுபவம், டெல்லி மேலிடத்தின் நம்பிக்கை, பெண்கள் பிரதிநிதித்துவம் மற்றும் கொங்கு மண்டல அரசியல் சமன்பாடு ஆகியவற்றை முன்வைத்து அவர் தனது வாய்ப்பை உறுதி செய்ய முயற்சி செய்கிறார்.
இவர்களைத் தவிர, அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ‘ரேஸில்’ இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கட்சிக்குள் ‘பவர் பாலிடிக்ஸ்’ தீவிரமாகி வருகிறது.
அதே நேரத்தில், அதிமுக தரப்பில் துணை முதல்வர் பதவியை கூட்டணி கட்சிக்கு வழங்குவது எளிதான முடிவு அல்ல. கடந்த காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் வகித்த இந்த பதவியை வெளியக கட்சிக்கு வழங்குவது பெரிய அரசியல் ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பே அதிகாரப் பங்கீடு குறித்து உறுதி பெற பாஜக முயற்சி மேற்கொள்வதாகவும், அதற்காக ஆர்.எஸ்.எஸ் மூலமாக அழுத்தம் தரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில், “முதலில் வெற்றி – பிறகு பதவி” என்ற அதிமுக நிலைப்பாட்டுக்கும், “முன்னதாகவே அதிகார ஒப்பந்தம்” என்ற பாஜக அணுகுமுறைக்கும் இடையே உருவாகியுள்ள இந்த மோதல், தேர்தல் அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Who will be the Deputy Chief Minister The power race has begun within the BJP Check for Edappadi on the Nagpur route Is the game changing