திருமணம் எப்போது? கேள்விக்கு சிம்பு வைத்த ஸ்ட்ரெய்ட் ரிப்ளை...! - ரசிகர்கள் ஆச்சரியம்
When wedding Simbus straight reply question Fans surprised
தமிழ் சினிமாவின் முன்னணியில் ஒளிரும் நடிகர் சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

இந்த படத்துக்காக புதிய லுக்கில் – ஸ்டைலிஷ் ஹேர் கட்ட், மர்மமான ஆட்டிட்யூட் என முற்றிலும் மாற்றியமைந்த தோற்றத்தில் சுற்றிவரும் சிம்பு, அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய வார்த்தைகள் இணையத்தையே கவர்ந்துவிட்டன.
அதில் அவர் உணர்ச்சியுடன் கூறியதாவது,"எங்கே சென்றாலும் ‘திருமணம் எப்போது?’ என்ற ஒரே கேள்விதான். அது நடக்கும் நேரத்தில் நடந்துவிடும். ஒற்றையா இருக்குறோம், குடும்பமாக இருக்குறோம், இது பெரிய விசயம் இல்லை.
நம்ம வாழ்க்கை அமைதியாக, மனசு சந்தோஷமாக இருக்குதா? என்பதுதான் முக்கியம். நாலு பேருக்கு நிம்மதி கொடுக்க முடிந்தாலே அது தான் வெற்றி. ‘இவனேன்னா தத்துவம் பேசுறானே?’ என்று யோசிக்க வேண்டாம்…
வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக அடித்திருக்கு. அதனால் தான் நான் இப்படி பேசுறேன்," என சிம்பு தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்தினார்.
English Summary
When wedding Simbus straight reply question Fans surprised