பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எச்.ராஜா; நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாஜக MLA வானதி சீனிவாசன்..!
Vanathi Srinivasan met H Raja in person and inquired about his well being
சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மேடையிலேயே மயங்கியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர், உடனடிய பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்ற நிலையில், அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரை நேற்று தமிழக முதலமைச்சர் மற்றும் பல அரசியல் தலைவர் நேரில் என்று பார்வையிட்டு உடல் நலம் குறித்து விசாரித்து வந்தனர். அந்தவகையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
English Summary
Vanathi Srinivasan met H Raja in person and inquired about his well being