விஜய்க்கு ஒன்றுமே தெரியாது; டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்; நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran criticized Vijay saying he knows nothing about being a political leader
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசுகையில் கூறியதாவது:
''தமிழ்நாட்டில் மும்முனை போட்டி, நான்கு முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம். அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர்.'' என்று தெரிவித்த இருந்தார்.
பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துள்ளதாவது:

"விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். 03 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின், கட்சியின் தலைவராக இருந்துகொண்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்னவென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் என்றும், என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Nainar Nagendran criticized Vijay saying he knows nothing about being a political leader