'தமிழகத்தில் ரூ.35,700 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது'; அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்திற்கு 02 புல்லட் ரெயில்கள் இயக்கப்படும் என்றும், சென்னை-பெங்களூரு, சென்னை- ஐதராபாத் வழித்தடத்தில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சென்னை-ஐதராபாத் இடையே 2.55 மணி நேரம், சென்னை- பெங்களூரு இடையே 1.13 மணி நேரத்திலும் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்கள் புனரமைப்பட்டுள்ளதாகவும், 95 சதவீதம் ரெயில் தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.35,700 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதோடு, மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெரும்பாலான ரெயில் திட்டங்களுக்கான மேம்பாட்டு பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு இல்லை என்றும், மன்னார்குடி- பட்டுக்கோட்டை, தஞ்சை-மன்னார்குடி ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister Ashwini Vaishnaw announced that railway projects worth Rs 35700 crore are being implemented in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->