முஸ்தாபிஜுர் ரகுமான் விவகாரத்தில் பொதுவெளியில் அறிக்கையால் குழப்பம்; பிசிசிஐ தந்திரமாக கையாண்டு இருக்கலாமே..? சமி-அல்-ஹசன் பர்னி கூறுவது என்ன..?
Shami ul Hasan Burney says the BCCI might have handled the Mustafizur Rahman issue tactfully
டி 20 உலகக் கோப்பை 2206 தொடர் வருகிற 07-ந்தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கூறி பங்களாதேஷ் அணி, இந்தியாவுக்கு செல்ல மாட்டோம், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், கடைசி நேரத்தில் மாற்றம் செய்யமுடியாது என, ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதையடுத்து, பங்களாதேஷ் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.
இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்து, இந்தியாவுக்கு எதிராக லீக் தொடர் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுத்துள்ளது.
இந்த நிலையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விவகாரத்தை பிசிசிஐ இன்னும் தந்திரமாக கையாண்டிருந்தால் டி20 உலகக் கோப்பையில் புறக்கணிப்பு குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என ஐசிசியின் முன்னாள் தகவல் தொடர்பு தலைவர் சமி-அல்-ஹசன் பர்னி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது: கிரிக்கெட் நிர்வாகிகள் அல்லது போட்டிக்கான பொறுப்பாளர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, முஸ்தாபிஜுர் ரகுமானை கே.கே.ஆர். அணியில் இருந்து வெளியிடுவது போன்ற பொதுவெளி அறிக்கையை தவிர்த்திருந்தால், இதுபோன்ற குழப்பமான விசயங்களை தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாற விஷயங்களில் அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடத் தேவையில்லை என்றும், அவர்கள் தனிப்பட்ட முறையில் கே.கே.ஆர் அணியிடம் வீரரை ரிலீஸ் செய்ய சொல்லியிருக்கலாம். அப்படி இருந்திருந்தால் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்காது. எல்லாம் சுமூகமாக சென்றிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சில சமயங்களில் நீங்கள் தீர்ப்பில் தவறு செய்து, சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டுவிடுகிறீர்கள் என்று கூறியுள்ளதோடு, ஜனவரி 03 ஆம் தேதி அறிவிப்பு ஒரு தூண்டுதலாக அமைந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இவர் ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட போர்டின் மீடியா இயக்குனராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Shami ul Hasan Burney says the BCCI might have handled the Mustafizur Rahman issue tactfully