தலாய் லாமாவுக்கு கிராமி விருது; சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி என்று சீனா கண்டனம்..! - Seithipunal
Seithipunal


68-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றார். 

அவரது "Meditations: The Reflections of His Holiness the Dalai Lama" என்ற ஆல்பத்திற்காக, "சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு" பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருதை சீனாவுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிக்கான கருவியாக சில தரப்பினர் பயன்படுத்துவதாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தலாய் லாமா ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல, அவர் மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

அத்துடன், கலைத்துறை சார்ந்த விருதுகளை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை சீனா வன்மையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China condemns the Grammy Award given to the Dalai Lama


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->