அப்போலோ மருத்துவமனையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!
Rajinikanth met senior BJP leader H Raja at Apollo Hospital and inquired about his health
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர், மேடையிலேயே மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக பாலாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் எச்.ராஜா சிகிசிச்சை பெற்று வருகிறார். நேற்றையதினம் எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த தகவலை தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அதன்படி, நேற்று தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். ஏனைய அரசியல் தலைவர்களும் நலம் விசாரித்து வரும் நிலையில், பாஜக எம்,எல்.ஏ, வானதி ஸ்ரீனிவாசனும் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில்.
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.
English Summary
Rajinikanth met senior BJP leader H Raja at Apollo Hospital and inquired about his health