'இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடாதது வருந்ததக்கது; ஆனாலும், எனது அரசின் பக்கம் நிக்கிறேன்'; ஷாஹித் அப்ரிடி..! - Seithipunal
Seithipunal


டி 20 உலகக் கோப்பை 2206 தொடர் வருகிற 07-ந்தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ளது. 20 அணிகள் பங்கேற்றுக்கும் இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறஉள்ளது. இதில் பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளது. 

முஸ்தாபிஜுர் ரகுமான் கே.கே.ஆர் ஐ.பி.எல் அணியில் இருந்து விடுவிக்கப்ப விவகாரத்தில் இந்தியாவில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு காரணங்களை கூறி பங்களாதேஷ் அணி, இந்தியாவுக்கு செல்ல மாட்டோம், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், கடைசி நேரத்தில் மாற்றம் செய்யமுடியாது என, ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதையடுத்து, பங்களாதேஷ் அணி  டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்து, இந்தியாவுக்கு எதிராக லீக் தொடர் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. ஆனால், போட்டியை புறக்கணிப்போம் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முடிவு குறித்து ஷாஹித் அப்ரிடி கூறுகையில்; அரசியல் அதன் கதவை மூடும் போது, கிரிக்கெட் கதவு திறக்கப்படும் என்று நான் எப்போதுமே நம்புவேன்.

ஆனால், இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருந்ததக்கது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அரசின் முடிவின் பின்னால் நான் நிற்கிறேன். இது ஐசிசி-க்கு அறிக்கை மூலம் அல்லாமல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாரபட்சம் இல்லாமல், சுதந்திரமான நியாயமான முடிவுகள் எடுப்பதை நிரூபனம் செய்யக்கூடிய நிலையென்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shahid Afridi says it is regrettable that Pakistan will not play against India


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->