விராட்–ரோஹித்தை நீக்க முயலும் கம்பீர்-தேர்வுக்குழுவுக்கு ஹர்பஜன் எச்சரிக்கை – அவங்களை சுத்தி டீமை எடுங்க.. ஹர்பஜன் - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிகப்பெரிய விவாதமாக உள்ளது — 2027 உலகக்கோப்பை. டெஸ்ட் மற்றும் டி20-இல் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர், ஒருநாள் வடிவில் தொடர்ந்து விளையாடி 2027 உலகக்கோப்பையின் மூலம் தங்கள் பயணத்தை கௌரவமாக முடிக்கத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே “வயது” என்ற பெயரில் இருவரையும் அணியில் இருந்து வெளியேற்ற தேர்வுக்குழு மற்றும் இந்திய அணித் தலைவர் கௌதம் கம்பீர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்பியன்ஸ் டிரோபி 2025 வென்ற ரோஹித்தை அடுத்த தொடர்களில் புறக்கணித்தது தேர்வுக்குழுவின் முதல் படியாகக் கருதப்படுகிறது. சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் ரோஹித்து, விராட் இருவரும் தங்கள் திறமையை மறுபடியும் நிரூபித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித் தொடர்நாயகன் எனத் தேர்வானார். பின்னர் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் அதேபோல் விராட் கோலி தொடர்நாயகன் விருதை வென்று, “நாங்கள் இன்னும் முடிவடையவில்லை” என்ற வலுவான செய்தியை அனுப்பினார்.

இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர்,“2027 உலகக்கோப்பைக்கான அணியில் யாருக்கும் உறுதி இல்லை”என்று பேசியது ரசிகர்களை பெரிதும் கோபப்படுத்தியது.இந்த விவகாரத்தில் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியது இதுதான்:“விராட், ரோஹித்தை விட பெரியவர்கள் யார்? அவர்களை நீக்க நினைப்பதே தவறு. மாறாக அவர்களைச் சுற்றியே 2027 உலகக்கோப்பை அணியை அமைக்க வேண்டும். இளம் வீரர்களை தேர்வு செய்வது நல்லது. ஆனால் அனுபவத்தை இல்லாமல் பெரிய போட்டியில் இறங்கினால் கடைசியில் வருந்த வேண்டி வரும்.”

அவர் மேலும் கூறினார்:“இந்த உலகக்கோப்பை அவர்களுடைய கடைசி வாய்ப்பு. அவர்களை புறக்கணித்தால் அது இந்திய அணிக்கே நஷ்டம். அவர்களின் ஃபிட்னஸ் நல்லதாக இருக்கும் வரை, அவர்கள் அணியில் முதல் இரண்டு பெயர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இருப்பதால் பேட்டிங் வரிசை திடமாகும். கடைசியில் ‘ஏன் நம் சிறந்த வீரர்களை விளையாட வைக்கவில்லை’ என்று வருந்த வேண்டிய நிலையை ஏற்படுத்தாதீர்கள்.”

2027 உலகக்கோப்பையை முன்னிட்டு அனுபவமா? இளைய இரத்தமா? என்ற கேள்வி தீவிரமாக எழுகின்ற வேளையில், ஹர்பஜனின் இந்த எச்சரிக்கை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கும், தேர்வுக்குழுவிற்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Harbhajan warns Gambhir who is trying to remove Virat Rohit to the selection committee hammer them and take the team Harbhajan


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->