கூகுளை தொடர்ந்து களமிறங்கியது மைக்ரோசாப்ட் இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு – இந்தியாவுக்கு ஜாக்பாட்!
Following Google Microsoft invests Rs1 lakh crore in India jackpot for India
இந்திய தகவல் தொழில்நுட்ப துறைக்கு வரலாற்றிலேயே மிகப்பெரிய முன்னேற்றமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஆசியாவில் மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு இதுவே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூகுள், அமேசான் உள்ளிட்ட பிரமாண்ட நிறுவனங்கள் இந்தியாவில் தரவு மையங்கள் அமைக்கும் திட்டங்களை அறிவித்த நிலையில், மைக்ரோசாப்டின் இந்த அறிவிப்பும் நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்,இந்த முதலீடு செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு, டிஜிட்டல் திறமைகள் போன்ற துறைகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என. இந்திய இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் நாதெல்லா உறுதியளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த முதலீட்டை வரவேற்று,“மைக்ரோசாப்ட் இந்தியாவில் செய்யும் இந்த மிகப்பெரிய முதலீடு, எங்கள் இளைஞர்களின் புதிய திறன்களை வெளிக்கொணரும். செயற்கை நுண்ணறிவில் இந்தியா முன்னணி நாடாக உருவாக இது முக்கிய பங்களிப்பாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, கூகுள் நிறுவனம் ரூ.1.3 லட்சம் கோடி செலவில் விசாகப்பட்டினத்தில் அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் அமேசானும் பல ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் தரவு மையங்களை விரிவுபடுத்துகிறது. Qualcomm நிறுவனமும் இந்தியாவில் சிப் மற்றும் ஏஐ தொழில்நுட்ப மேம்பாட்டில் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுகிறது.
இந்த முன்னணி நிறுவனங்களின் தொடர் முதலீடுகள், இந்தியா உலகளாவிய டிஜிட்டல் மையமாக மாறிக் கொண்டிருப்பதற்கான தெளிவான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
English Summary
Following Google Microsoft invests Rs1 lakh crore in India jackpot for India