தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த அனுமதி..அடுத்து என்ன? - Seithipunal
Seithipunal


போராட்டம் நடத்த தூய்மை பணியாளர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் சமீபத்தில் தூய்மை பணியாளர்கள் நடத்திய தொடர் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த மாதம் 1ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 

இரண்டு வாரத்திற்கும் மேலாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., காங்கிரஸ், நா.த.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.இதற்கிடையில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து தூய்மை பணியாளர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியேற்றினர். இதையடுத்து போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவந்தது.அவர்களை கைது செய்து பின்னர் கோரிக்கைகளை ஏற்பதாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினர்.பலகட்ட பேச்சுவார்த்தைக்கு அப்புறம் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், போராட்டம் நடத்த தூய்மை பணியாளர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cleanliness workers have been permitted to hold a protest what's next?


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->