கனமழையால் ஸ்தம்பித்து போயுள்ள டெல்லி: 02 மணி நேர மழை, 20 கி.மீ டிராபிக் ஜாம்: பாஜக அரசின் திறமையின்மையே இந்த நிலைக்குக் காரணம்; விளாசித்தள்ளும் காங்கிரஸ்..! - Seithipunal
Seithipunal


டெல்லி மற்றும் குருகிராமில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. குறிப்பாக, குருகிராம் நகரம் முற்றிலும் ஸ்தம்பித்து போயுள்ளது. இவ்விவகாரம் தற்போது அரசியல் களத்திலும் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. 

டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள இஃப்கோ சவுக் போன்ற முக்கியப் பகுதிகளில் 07 கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் போக்குவரத்துக்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் போது மழையும் சேர்ந்துகொண்டதால் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் நெரிசலில் சிக்கியுள்ளனர். அதாவது, அரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய பயணத்திற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகியுள்ளது.

சாலைகளில் பல இடங்களில் நான்கு அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக டெல்லிவாசிகளுக்கு வெப்பத்திலிருந்து விடுதலை கிடைத்தாலும், போக்குவரத்து நெரிசலால் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்தச் சூழலில், கனமழை பாதிப்பைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் தங்களது பணிகளை வீட்டில் இருந்து இணையவழியில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இன்றும் டெல்லிக்கு மிகக் கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாகச் விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 

இரண்டு மணி நேர மழைக்கு 20 கி.மீ. போக்குவரத்து நெரிசல் என்று குறிப்பிட்டுள்ளதோடு, முதலமைச்சர் விமானத்தில் பயணிப்பதால் மக்களின் துயரம் அவருக்குத் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், ஆயிரம் கோடி ரூபாய் நகரம் இன்று மூழ்கும் நகரமாக மாறிவிட்டதாகவும், குருகிராமின் பெயரை 'குளம்கிராம்' என்று மாற்றிவிடலாம் என்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். டெல்லி அரசின் திறமையின்மையே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress has criticized the BJP government for causing 20 km of traffic jams in Delhi due to heavy rains for 2 hours


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->