75 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை - முதலமைச்சர் வழங்கினார்..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, 

"சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக இரண்டு பேருக்கு பணி நியமன ஆணைகளை  வழங்கினார். 

இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிகமாகப் பணிபுரிந்து வந்த 586 பருவகால பட்டியல் எழுத்தர்கள், உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர்கள் உள்ளிட்டோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இரண்டு பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

இதைத்தொடர்ந்த்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, கழகத்தின் பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில், கழகத்தின் நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட 12 ஆயிரத்து 177 பேருக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1,500 வீதம் மொத்தம் ரூ.1.83 கோடியை வழங்கிடும் அடையாளமாக 15 பேருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mkstalin gave 75 member appointed order


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->