திமுகவிலிருந்து நீக்கம்! ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!
MK Stalin suspend dmk persons involved kanchipuram young lady murder
திமுக நிர்வாகி மற்றும் அவருடைய சகோதரர், இளம்பெண் ஒருவரை குளிக்கும்போது ஆபாசமாக படம் எடுத்து, நான்கு வருடங்களாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அந்த இளம் பெண் மர்மமான முறையில் கடந்த ஜூன் 24ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி தேவேந்திரன் மற்றும் அவர் சகோதரர் புருஷோத்தமனை இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். \

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூர் அடுத்த நயினார் குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் சசிகலா. இவர் கடந்த ஜூன் 24ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் புகார் தெரிவித்ததையடுத்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.
சசிகலா குளிப்பதை படம் எடுத்து மிரட்டி வந்த திமுக இளைஞரணி அமைப்பு செயலாளர் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் இருவரும் அந்த பெண்ணை பலவந்தமாக நான்கு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அதனைத் தடுக்கும் விதமாக இருவரும் செயல்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக #JusticeForSasikala என்ற பெயரில் இன்று ட்விட்டரில் ட்ரென்ட் ஆக அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகம் கட்சியின் பெயரைக் காப்பாற்றும் வகையில் இந்த படுபாதக குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரையும் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
MK Stalin suspend dmk persons involved kanchipuram young lady murder