நள்ளிரவில் திடீர் ரெய்டு.. அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்.. அரைபோதை லைன் மேனுக்கு ஆப்பு.!! - Seithipunal
Seithipunal


நள்ளிரவில் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர், மதுபோதையில் இருந்த லைன் மேனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சென்னையில் உள்ள அண்ணா சாலை பகுதியில் இருக்கும் மின் வாரிய அலுவலகங்களில் நேற்று நள்ளிரவு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது அங்குள்ள மின்னகம் என்ற மின்சார விநியோக பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்கும் சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது மக்களிடம் இருந்து வந்த அழைப்பை அவர் நேரடியாக எடுத்து பேசினார். இதன்போது, கொருக்குப்பேட்டை பகுதியில் மின்சாரம் இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நள்ளிரவு 12:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சாரத்துறை அமைச்சர், கொருக்குப்பேட்டை துணைமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த சமயத்தில், அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் மின் விநியோக தடை தொடர்பாக கேள்வி எழுப்பிய சமயத்தில், அவர் சம்பந்தமில்லாமல் பதில் தெரிவித்த நிலையில் அவர் போதையில் இருப்பதை உறுதி செய்து கொண்ட அமைச்சர், மற்ற அதிகாரியிடம் விஷயத்தை கேட்டு மின் வினியோகத்தை உடனடியாக சீர் செய்து வழங்குமாறு உத்தரவிட்டார். 

இந்நிலையில், மது போதையில் இருந்த லைன்மேனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும், துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், ரூபாய் 125 கோடியில் புதிதாக 6800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. 

இதனால் அவை விரைவில் நிறுவப்பட்டு மின்தடை பிரச்சினைகள் சீர் செய்யப்படும். மின்னகத்தில் நான் ஆய்வு செய்தபோது கொருக்குப் பேட்டையில் இருந்து மின்சார பிரச்சனை தொடர்பாக புகார் வந்தது. உடனடியாக துணை மின்நிலையத்திற்கு வந்து பார்க்கையில் லைன் மேன் மதுபோதையில் இருந்தார். அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister V Senthil Balaji Visit Power Station to Investigation Work Officials got Shock due to Un Expected Inspection


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->