அமைச்சரின் ஆலோசனையை ஏற்று, முழு மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன் - தமிழக முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


நாம் இருவரும் விவசாயி, நாம் நவீன கால்நடை மருத்துவக்கல்லூரியை நேரில் சென்று திறந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள் என கால்நடை அமைச்சர் கோரிக்கை வைத்ததாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் நவீன கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை தமிழக முதல்வர் இன்று திறந்துவைத்தார். சுமார் 1200 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ கல்லூரி, ஆசியாவிலேயே மிகப்பெரிய கல்லூரியாக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இதன்பின்னர் உரையாற்றுகையில், " நமது கால்நடைத்துறை அமைச்சர்  அவர்கள், கால்நடை மருத்துவ கல்லூரியை திறந்து வைக்க வேண்டும் என்று கூறினார். 

நான் (முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி) காணொளி வாயிலாக சென்னையில் இருந்து திறந்து வைக்கலாம் என தெரிவித்தேன். ஆனால், நீங்களும் விவசாயி, நானும் விவசாயி.. நாம் இருவரும் சேர்ந்து கால்நடை மருத்துவ கல்லூரியை நேரில் சென்று திறந்து வைத்தால், விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறினார். 

அவரின் ஆலோசனையை நான் ஏற்றுக்கொண்டேன். இன்று நேரில் திறந்து வைத்துள்ளேன். கால்நடை வளர்ப்பிற்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முக்கியத்துவம் அளித்து வருகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Udumalai K Radhakrishnan Request to TN CM about Salem Animal Hospital Opening


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal