பெண்களுக்கு படிப்பு எதற்கு? என ஒரு கும்பல் கேட்டு கொண்டிருந்தது, ஆனால்...! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
Minister Udhayanithi Stalin Say About Woman Education
மாணவர்களின் கல்வியை கெடுக்க எத்தனை சூழ்ச்சிகள் நடந்தாலும் அதை முறியடிப்போம் என்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இன்று ஈரோட்டில் நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாவது,
"கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்களுக்கு படிப்பு எதற்கு என ஒரு கும்பல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.

தற்போது தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயில செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில்,
"திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.
திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக உயர்கல்விகள் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
14 மாணவர்கள் தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் முதல் முறை பயணம் செய்யும் முழு செலவையும் தமிழக அரசே ஏற்று உள்ளது.
வாய்ப்பு கிடைத்தால் நம் மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள். விண்வெளியில் கூட இனி தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தான் ஆட்சி செலுத்துவார்கள்.
மாணவர்களாகிய நீங்கள் இந்த நிலைக்கு வர பல தடைகளை தாண்டி வந்துள்ளீர்கள். இனியும் தடைகள் வரலாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister Udhayanithi Stalin Say About Woman Education