அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர்: பரபரப்பில் ஆசிரியர்கள்!
minister surprise visit to Theni government school
தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் என்று தேனிக்கு வந்தார். இதற்கு முன்னதாக பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அமைச்சர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.
தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் உள்ளிட்ட பொருட்கள் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் வழங்கப்பட்டதா என கேட்டறிந்தார். கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட நடப்பு கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

பின்னர் மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்திற்கு சென்று பார்வையிட்டு தரமான உணவு பொருட்களைக் கொண்டு சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி போன்றவை முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் மாணவர்களை தனியாக வரவழைத்து தரமான கல்வி அளிக்கப்படுகிறதா, வேறு ஏதாவது குறைகள் உள்ளதா எனவும் கேட்டறிந்தார்.
எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது ஆசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
minister surprise visit to Theni government school