ரொம்ப கவனமா இருக்கணும் அப்பு.. அமைச்சர் செல்லூர் ராஜுவின் அல்டிமேட் ஆயுதம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுப்பதற்காக தெர்மாக்கோல் விட்டு சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்பியிருந்தார். தற்போது அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலைமை இருக்கிறது. 

இதனையடுத்து மீண்டும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கழுத்தில் நீல வண்ண அடையாள அட்டையுடன் எந்த நேரமும் பயணம் செய்து வந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக விசாரிக்கையில் வைரஸ் ஷட் அவுட் என்ற பெயரில், ஜப்பான் நிறுவனம் தயார் செய்துள்ள வைரஸ் தடுப்பு அட்டையை அவர் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. 

மேலும், இந்த வைரஸ் தடுப்பு அட்டை மூலமாக வைரஸ் கிருமிகள் பரவாது என்றும் தெரிய வருகிறது. இந்த அட்டையானது கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே உலக அளவில் பயன்பாட்டுக்கு வந்து விட்டாலும், அமேசான் இணையதளத்தில் கடந்த மாதம் முதலாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது. 

இந்த அட்டை குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த அட்டைகளை பயன்படுத்தப்படும் நாட்களுக்கான அளவை பொறுத்து விலை அதிகரிக்கும் என்றும், இதனால் கொரோனா பரவாது என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றும் தெரிய வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sellur K Raju Wear Japan Made corona prevent Corona Check Out Kid


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal