திரு.வி.க.நகர் மண்டலத்தில் பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!  - Seithipunal
Seithipunal


மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபுஅவர்கள், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதாரமையங்களுக்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்து, முடிவுற்றபல்நோக்குக் கட்டடம் மற்றும் குழந்தைகள் மைய திட்டப்பணிகளைப் பயன்பாட்டிற்குத்திறந்து வைத்தார்.

மாண்புமிகுஇந்துசமயம்மற்றும்அறநிலையத்துறைஅமைச்சர்திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் 23.04.2025 அன்று திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-76க்குட்பட்ட செல்லப்பா தெருவில் ரூ.1.58 கோடி மதிப்பில் 455 சதுர மீட்டர்பரப்பளவில் புதியதாக கட்டப்படவுள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையம் மற்றும்வார்டு-78க்குட்பட்ட வி.வி. கோயில் தெருவில் ரூ.1.58 கோடி மதிப்பில் 455 சதுரமீட்டர் பரப்பளவில் புதியதாக கட்டப்படவுள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையம்அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.இந்த சுகாதார மையங்களில் வரவேற்பு பகுதி, மருந்தகம், ஊசி போடும் அறை,IPD அறை, நலவாழ்வு மையம், ஆய்வக அறை, மருந்து இருப்பு அறை, ஸ்கேனிங்அறை, மருத்துவ ஆலோசனைகளுக்கு 2 அறைகளுடன் 455 சதுர மீட்டர் பரப்பளவில்அமைக்கப்படவுள்ளது.

இதனைத்தொடர்ந்து,மாண்புமிகுஇந்துசமயம்மற்றும்அறநிலையத்துறைஅமைச்சர் அவர்கள், வார்டு-76க்குட்பட்ட செல்லப்பா தெருவில் மாமன்ற உறுப்பினர்வார்டு மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.17 இலட்சம் மதிப்பில் 800 சதுர அடி பரப்பளவில்கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கட்டடம் மற்றும் ரூ.15 இலட்சம் மதிப்பில் 800 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினையும் பயன்பாட்டிற்குத்திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர் பிரியா, திரு.வி.க. நகர்சட்டமன்ற உறுப்பினர் திரு தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர்திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திருமதி சரிதாமகேஷ்குமார், நியமனக் குழு உறுப்பினர் திரு.சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள்திருமதி. எஸ். தமிழ்செல்வி, திரு. பரிதி இளம்சுருதி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Sekar Babu inaugurated various projects in Thiru Vi Ka Nagar zone


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->