வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டின் 2வது பாடல் வெளியானது!
PMK Vanniyar Chithirai Maanadu 2nd song
வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் மே 11ம் தேதி திருவிடந்தையில் நடைபெற உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் நோக்குடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாட்டை முன்னிட்டு கடந்த வாரம் பந்தக்கல் வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர், பாட்டாளி சொந்தங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த வாரம் மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பாடல் வெளியிடப்பட்ட நிலையில், மாநாட்டிற்கான இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
"அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா" என்ற வரிகளுடன் தொடங்கும் பாடல் தற்போது பரவலாக கவனம் பெற்றுள்ளது.
முதல் பாடல்
English Summary
PMK Vanniyar Chithirai Maanadu 2nd song