தொடங்கிய அக்னி நட்சத்திரம்... நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதெர் மேன் பிரதீப் ஜான்!
Agni natchathiram TN Weatherman report
இன்று முதல் கதிரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் தொடங்குகிறது. இந்த 24 நாட்கள் வெயில் வெளுத்து வாங்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்ததாவது: “கத்திரி வெயில் நாளை தொடங்கினாலும், மழையுடன் கூடிய நிலைமை அடுத்த ஒரு வாரத்திற்கு தொடரும்.
ஆகவே, வெயிலின் தாக்கம் அதிகமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரலைவிட இந்த ஆண்டின் ஏப்ரல் காலநிலை தமிழ்நாட்டுக்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது.
தமிழகத்தின் நடுநிலை மற்றும் மேற்கு மாவட்டங்களில் இப்போது மழை தொடரும். அதேசமயம் ஆந்திர எல்லையை ஒட்டிய வேலூர் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 39–40 டிகிரியாக இருக்கும். இது அப்பகுதிக்கான இயல்பான வெப்பநிலையே” என்றார்.
English Summary
Agni natchathiram TN Weatherman report