என்னைக் கொலை செய்ய சதி நடந்தது - பரப்பரப்பைக் கிளப்பிய மதுரை ஆதீனம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் மதுரை ஆதீனத்தின் சார்பில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக பிரதமர் மோடி, பல்வேறு மாநில ஆளுநர்கள் முதலமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் சிவாச்சாரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக மதுரை ஆதீனம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இதில் மதுரை ஆதீனம் எந்த காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், இந்த விபத்து திட்டமிட்ட சதி என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது. என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர். தருமை ஆதினம் ஆசி தான் என்னை காப்பற்றியது. 

மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமான் தான் என்னை காப்பாற்றினார். இன்று இந்த இடத்தில் நிப்பேனா என்ற அளவுக்கு நேற்று சம்பவம் நடந்துவிட்டது. அவ்வளவு துாரம் நடந்து விட்டது. நல்ல காரியத்தை பேச முடியவில்லை ஐயா.

புத்தர் ஆட்சி காலம் பொற்காலம் என்பார்கள், நான் பார்த்ததில்லை. ஆனால் எங்கள் தர்மபுர ஆதினத்தின் காலம் பொற்காலம் தான். பாஜகவில் தேசபக்தி மிக்கவர்கள் உள்ளனர். எத்தனையோ பேர் ஆண்டாலும், சிறந்த ஆளுமையாக இருப்பவர் பிரதமர் மோடி தான். ஆளுநர் ஆர்.என்.ரவி மிகவும் துணிச்சலானவர்.

கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்கின்றனர். இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்கின்றனர். இந்துக்கள் சுண்டல் தருகிறார்களா என்று கேட்கின்றனர்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madurai aadheenam say plan to kill me


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->