மே 20 புதுச்சேரியில் பந்த்..அனைத்து தொழிற்சங்கம் அறிவிப்பு!
May 20 Bandh in Puducherry All union notice
மே 20 பந்த், மறியல் போராட்டம் ராஜா தியேட்டர், சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், காரைக்கால் ஆகிய மையங்களில் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது..
இந்திய நாட்டிலுள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்புகள் (18.03.2025) அன்று இந்திய தலைநகர் டெல்லியில் கூடி தொழிலாளர்களின் தேசிய பேரவை கூட்டத்தை கூட்டின. (National Convention of Workers).இந்த பேரவை கூட்டம் இந்திய உழைக்கும் மக்கள் சந்திக்கக்கூடிய பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளது.
அப்போது, தொழிலாளர்கள் சார்பாக தனித்தும் கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்து (20.05.2025) அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென ஏகமனதாக முடிவு செய்துள்ளது.
இப்போராட்டத்தை புதுச்சேரியில் முழு வெற்றியடைய செய்வதற்காக கூடிய அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்பின் புதுச்சேரி மாநில கூட்டம், இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு புதுச்சேரி மாநில தொழிலாளர்களின் நலனை முற்றாக புறக்கணிப்பதையும் விவாதித்து புதுச்சேரி அரசை வலியுறுத்தும் கோரிக்கைகளையும் இணைத்து (20.05.2025) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில்பங்கேற்பது, மே 20 புதுச்சேரியில், வேலை நிறுத்தம், முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
1. புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிடு!
2. அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- மாதமொன்றிற்கு நிர்ணயம் செய்திடு.
3. ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டு. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
English Summary
May 20 Bandh in Puducherry All union notice