பெஸ்ட் புதுச்சேரி' செயல்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்..அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


பிரதமர் அறிவித்த 'பெஸ்ட் புதுச்சேரி' செயல்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அறிவுறுத்தினார்.

ஆளுநர் மாளிகையில் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்  நமச்சிவாயம், துணைநிலை ஆளுநரின் செயலர் மணிகண்டன், தொழில் வளர்ச்சித்துறைச் செயலர் ருத்ர கௌடு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தொழில்துறை வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணைநிலை ஆளுநர், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

புதுச்சேரியில் தொழில் துறை வளர்ச்சிக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.புதிய தொழில் முதலீட்டாளர்களை கவரும் வகையிலான திட்டங்களையும் நடைமுறைகளையும் செயல்படுத்த வேண்டும்.

புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
தொழில்நுட்ப பூங்கா, ஜவுளி பூங்கா போன்ற தொழில்துறைகளை தொடங்க ஆர்வம் காட்டும் தொழில் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். 

தொழில்துறை வளர்ச்சி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் என்பதால் கூடுதல் கவனத்தோடும் சிரத்தையோடும் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 'பெஸ்ட் புதுச்சேரி'(BEST Puducherry) செயல்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Best Puducherry action plan should be expedited Governors instructions to officials


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->