இன்று நீட் தேர்வு: மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! - Seithipunal
Seithipunal


இன்று  நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு காலத்திலோ, தேர்வுக்குப் பிறகோ முறைகேடு செய்தது தெரியவந்தால், தேர்வருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ள 31 மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

புதுச்சேரியில் நீட் தேர்வு நடைபெறும் இடங்கள் ,1.  தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏர்போர்ட் ரோடு, லாஸ்பேட்டை, பாண்டிச்சேரி.

 2.  சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலை நகர் வீதி, முத்தியால்பேட்டை புதுச்சேரி.

3.  பாரதிதாசன் பெண்கள் அரசு கல்லூரி, மகாத்மா காந்தி ரோடு, முத்தியால்பேட்டை, புதுச்சேரி.

4.  அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி ,லாஸ்பேட், புதுச்சேரி .

5.  புதுச்சேரி தொழில்நுட்ப (Technological) பல்கலைக்கழகம், பிள்ளை சாவடி, புதுச்சேரி.

6.  திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி லப்போர்த்வீதி, புதுச்சேரி .

7.  கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் மெயின் ரோடு, வில்லியனூர்.

8.  கேந்திர வித்யாலயா ஜிப்மர் கேம்பஸ் 1, தன்வந்திரி நகர், புதுச்சேரி. இதேபோல் காரைக்கால் மாஹே ஏனாம் பிரிவுகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது


பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஹால் டிக்கெட்டிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வு மையத்திற்குள் செல்ல இன்று காலை 11.30 மணி முதல் மாணவ-மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். மதியம் 1.30 மணிக்குள் அனைவரும் வந்துவிட வேண்டும். முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலைமுடியில் ஜடைப்பின்னல் போடக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தடை.

இன்று  நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு காலத்திலோ, தேர்வுக்குப் பிறகோ முறைகேடு செய்தது தெரியவந்தால், தேர்வருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET exam today Strict restrictions for students


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->