எல்லாத்துக்கும் இந்த அண்ணாமலை தாங்க காரணம் - குமுறிய திமுக அமைச்சர்!
Minister say Annamalai Behind the IT Raid
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய உறவினர் மற்றும் அவரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த வருமான வரி சோதனை அரசியல் ரீதியான நடவடிக்கை என்று, தமிழக வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவிக்கையில், உங்கள் அனைவருக்குமே தெரியும். இது பற்றி ஏற்கனவே நிறைய பேர் பதில் கூறி விட்டார்கள்.
இது அரசியல் ரீதியான ஒரு சோதனை தான். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே 'இன்னும் ஒரு வாரத்தில் பாருங்கள்' என்று எச்சரித்து இருந்தார்.
இப்போது வருமான வரி சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியானால் இங்கு அரசாங்கம் நடக்கிறதா? ஒரு கட்சியினுடைய நிர்வாகி சொல்வது படி தான் வருமான வரி சோதனை நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

எப்போதும் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றுதான் அரசியல் கட்சியினர் சொல்வது வழக்கம். செந்தில் பாலாஜி கூட நாங்கள் எதிகொள்ள தயார் என்று கூறிவிட்டார்.
ஆனால், அண்ணாமலையால் தான் இதெல்லாம் நடக்கிறது என்று, அமைச்சர் முத்துசாமியும், ஆர்எஸ் பாரதியும் குமுறி கொண்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Minister say Annamalai Behind the IT Raid