அசாம் மாநில பண்டிகைகளை ஒத்திவைத்த முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா...!
Assam Chief Minister Himanta Biswa has postponed festivals state
அசாம் முதலமைச்சர் ''ஹிமந்தா பிஸ்வா'' தனது எக்ஸ் தளத்தில்,'பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா முறியடித்து வரும் நிலையில் எல்லையில் பதற்றம் நிலவுவதால் பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம்' எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,"கடந்த ஒரு மாதமாக அசாம் முழுவதும் ஏராளமான கலாச்சார நிகழ்வுகள் மூலம் பிஹூவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளோம்.
மேலும், உற்சாகமான பங்கேற்பு மற்றும் பங்களிப்புகளுக்கு அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இருப்பினும், இந்த பண்டிகை காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது.
மே 10-ந்தேதி வரை கொண்டாட திட்டமிடப்பட்ட அனைத்து பிஹூ நிகழ்வுகளையும் ரத்து செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இந்த துடிப்பான கொண்டாட்டத்தை அது கொண்டாடப்பட்ட அதே ஒற்றுமை மற்றும் மனப்பான்மையுடன் ஒரு அழகான முடிவுக்குக் கொண்டுவருவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இவரது முடிவுக்கு அம்மாநில மக்களும் உறுதுணையாக இருக்கின்றனர்.
English Summary
Assam Chief Minister Himanta Biswa has postponed festivals state