கோவில் திருப்பணிக்குரூ. 17 லட்சம் நிதியுதவி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்!
17 lakh financial aid for temple renovationOpposition leader Shiva provided
வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்குரூ. 17 லட்சம் நிதியுதவி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் வழங்கப்பட்டது.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக, புதுச்சேரி அரசின் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ரூபாய் 14 லட்சம், சரோஜா - வெங்கடாசலம் குடும்பத்தினர் ரூ. 1 லட்சம், பாண்டுரங்கன் குடும்பத்தினர் ரூ. 1 லட்சம், மணிகண்டன் - வெங்கடேசன் குடும்பத்தினர் ரூ. 1 லட்சம் என மொத்தம் 17 லட்சம் ரூபாயை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் முன்னிலையில் கோவில் அறங்காவலர் குழுவினரிடம் இன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பற்குணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் குலசேகரன், செல்வம், மகாலிங்கம், மூர்த்தி, மாரி, பாலு, பன்னீர்செல்வம், சண்முகம், முருகன், சுந்தரமூர்த்தி, ஆறுமுகம், கணபதி, கோகுலகிருஷ்ணன், பிரித்திவிராஜ், பிரகாஷ்ராஜ், சந்திரேஷ், ராஜேந்திரன் சூர்யா சபரிநாதன் மற்றும் திமுக தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், இளஞ்செழிய பாண்டியன், பொருளாளர் கந்தசாமி, ஜனா, கதிரவன், கார்த்தி, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
English Summary
17 lakh financial aid for temple renovationOpposition leader Shiva provided