#BREAKING | 100 யூனிட் இலவச மின்சாரம் கிடையாதா? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!
Minister say about 100 unit free current issue 2023
ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று, அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின்இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி பதியப்பட்டு பரவி வருகிறது.

இந்த முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை.
இருந்த போதிலும் களஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு. சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
English Summary
Minister say about 100 unit free current issue 2023