மக்களே உஷார்.. புரெவி புயலின் தாக்கம் தமிழகத்தில் இந்த மாவட்டம் வரை இருக்கும்.! அமைச்சர் ஆர் பி உதயகுமார் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புரெவி புயல் நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 161 படகுகளில் ஆழ்கடலுக்கு சென்ற சுமார் 1,500 மீனவர்கள் கரை திரும்பவில்லை என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று புரெவி புயல் குறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வங்கக் கடலில் உருவாகும் புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத் தீவு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதிக்கப்படுகின்றனர். புயல் எச்சரிக்கை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister rb udhayakumar press meet about burevi cyclone


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal