புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று பெஞ்சல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் வ. மோகனச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister ramachandran visit storm Precautionary Measures


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->