பிளஸ் 2 தேர்வில் முதல் முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்!
Minister Anbil say calculators allowed Accountancy subject Plus 2 public examination
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சென்னையில் வெளியிட்டார்.
பத்திரிகையாளர்களுடன் பேசிய அவர், “இந்த ஆண்டில் பிளஸ் 2 கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்வில் மாணவர்கள் முதல் முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி பெறுவார்கள்” என்று தெரிவித்தார். இது பல ஆண்டுகளாக மாணவர்களும் ஆசிரியர்களும் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைகிறது.
அமைச்சர் மேலும் கூறியதாவது: “மாணவர்கள் எந்த அச்சமும் இன்றி பொதுத் தேர்வை எழுத வேண்டும். இது மாணவர்களின் தேர்வாக மட்டும் அல்ல, ஆசிரியர்களின் திறனையும் பிரதிபலிக்கும் தேர்வாகும். உற்சாகமாக, தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். இம்முறை அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
அட்டவணை விவரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் 26 வரை நடைபெறும். செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் 16 வரை நடத்தப்படுகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ளன.
மொத்தம் 8.07 லட்சம் பிளஸ் 2 மாணவர்களும், 8.70 லட்சம் 10ஆம் வகுப்பு மாணவர்களும் இந்தாண்டு தேர்வில் பங்கேற்கின்றனர்.
கணக்குப்பதிவியல் பாடத்துக்கு கால்குலேட்டர் அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த முடிவு, மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணக்கீடுகளில் துல்லியத்தையும் வேகத்தையும் பெறுவதால், இது தேர்வுத் தரத்தை உயர்த்தும் என கல்வி வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Minister Anbil say calculators allowed Accountancy subject Plus 2 public examination