AI, Robotics பாடத்திட்டங்களையும் கொண்டு வரவேண்டிய தேவை உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார். இந்த விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாநில கல்விக்கொள்கை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"எல்லோருக்கும் எல்லாம் என்பதிலிருந்து பிறந்தது தான் மாநில கல்வி கொள்கை. இந்த மாநில கல்விக் கொள்கையில் இருமொழி கொள்கை தான் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கல்வி என்பதே இந்தத் திட்டம். வாழ்க்கை மதிப்பீடுகள், தொலைநோக்கு பார்வை உள்ளடக்கியதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அனைவருக்குமான கல்வியை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் மாநில கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அச்சத்துடன் மாணவர்கள் பயிலும் நிலை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். உடற்கல்வி உள்ளிட்ட விஷயங்களையும் பார்த்து பார்த்து கொண்டு வந்துள்ளோம்.

மாநில கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு வருடமும் மாற்றப்படும். அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலைக்கு எந்த அறிவியல் பாடங்கள் தேவையோ அதையும் கொண்டு வந்துள்ளோம். 500 பள்ளிகளை வெற்றி பள்ளிகளாக கொண்டு வர உள்ளோம்.

AI, Robotics போன்ற பாடத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. எத்தகைய பின்னணி கொண்ட மாணவர்களும் எதிர்காலத்தில் எந்த கல்லூரியில் எந்த நிலை அடைய வேண்டும் என்று நினைக்கும் வகையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே மாணவ-மாணவிகள் கெரியர் வழிகாட்டி பெற்று எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister anbil magesh speech about State Education Policy


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->