#வேலூர் || ஆவின் பால் பண்ணையில் நூதன முறையில் பால் திருட்டு..!!
Milk theft from Vellore aavin dairy farm
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோன்று பால் உப பொருட்களான நெய், பால் கோவா, தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு ஆவின் முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளைக் கொண்டு செல்லும் வாகனத்தில் ஒரே பதிவில் கொண்ட இரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2500 லிட்டர் என பல நாட்களாக ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் திருடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூர் ஆவின் பால் பண்ணை அதிகாரி கூறுகையில் "இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனம் இயக்கப்பட்டது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளோம். போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் உடந்தையோடு பால் திருட்டு நடைபெற்று இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
Milk theft from Vellore aavin dairy farm