பேருந்தில் இடம் பிடிக்க ஓடிய பெண்ணின் கால் மீது ஏறிய பேருந்து டயர்!
Mettupalayam woman running catch bus an accident
நீலகிரி, கோத்தகிரியை சேர்ந்தவர் ராணி (வயது 50) இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் கோத்தகிரி செல்வதற்காக நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் நிலையத்திற்கு சென்றார்.
காலாண்டு தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் திறக்க உள்ளதால் ஊட்டி செல்வதற்காக ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்தனர்.
இதனால் பேருந்தில் இடம் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்த ராணி, கோத்தகிரியில் இருந்து வந்த அரசு பேருந்து பயணிகளை இறக்கி விட்டதும் பேருந்தை டிராக்கில் நிறுத்துவதற்காக ஓட்டுநர் முயன்றார்.

அந்த நேரத்தில் ராணி பேருந்தின் பின்புறம் சக்கரத்தின் அருகே உள்ள இருக்கையில் இடம் பிடிப்பதற்காக முயன்ற போது எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்புற சக்கரம் ராணியின் கால் மீது ஏறி இறங்கியதால் கால் நசுங்கி வலியில் கதறி துடித்தார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Mettupalayam woman running catch bus an accident