கறிக்கடை தகராறு.. வீடு தேடி வந்த வில்லங்கம்.! பின் அரங்கேறிய சோகம்.!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் தென்கரை பகுதியில் வாகம்புலி தெருவில் வசித்து வருகின்ற ஹக்கீம் மற்றும் ஜாபர் சேட் உள்ளிட்டோர் தாமரை குளம் கல்லூரி விலக்கு பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்துள்ளனர். 

அதே பகுதியில் சையது முகமது என்பவருடைய மாமனாரும் கோழிக்கறிக்கடை நடத்தி வந்துள்ளார். தன்னுடைய கடைக்கு அருகில் சுலைமான் என்பவருக்கும் இறைச்சி கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார். இத்தகைய சூழலில் ஹக்கீம் மற்றும் ஜாபர் ஆகிய இருவருக்கும் சுலை மானுக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் சுலைமானை அவர்கள் தாக்கியுள்ளனர். இதனை தேர்ந்து கொண்ட சையது முகமது வாகம்புலி தெருவில் இருக்கும் ஹக்கீம் மற்றும் ஜாபர் ஆகியோரின் வீட்டுக்கு சென்று விபரம் கேட்ட பொழுது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சையது முகமது கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். 

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சையது முகமது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men murdered in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->