தென்னை விவசாயிகளுக்கு மெகா ஜாக்பாட்...! ரூ.5.30 கோடியில் உருவாகிறது புதிய தென்னை பதப்படுத்தும் கழகம்...! - அமைச்சர் வினோத் மாஸ் அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2026–27-ஆம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். விவசாய உற்பத்தி உயர்வு, தோட்டக்கலை மேம்பாடு, விதை உற்பத்தி, தென்னை சாகுபடி, இயற்கை வேளாண்மை மற்றும் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

வேளாண் துறையில் தரமான விதைகள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.7.10 கோடி மதிப்பீட்டில் மூன்று புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கரும்பு சாகுபடியை விரிவுபடுத்தும் வகையில் 17,315 ஏக்கர் பரப்பளவிற்கு விதைக்கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் எட்டு புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

பாரம்பரிய விவசாய அறிவையும், நவீன தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில், மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை நடத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பனை மர வளர்ப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் விநியோகம், விவசாயிகளுக்கு பயிற்சி, பனைப் பொருட்கள் தயாரிப்பு கூடாரம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற குடும்பங்களில் இயற்கை உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் புதிய முயற்சியாக 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளின் மாடிகளில் காய்கறி மற்றும் கீரைத் தோட்டங்கள் அமைக்க மானியம் வழங்கும் இந்தத் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னை சாகுபடியை விரிவுபடுத்தி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் தென்னை சிறப்புத் திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் டானிக் வழங்குதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தில் இடம்பெறுகின்றன.

கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய தென்னை நாற்றுப்பண்ணை நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நஞ்சற்ற விளைபொருட்கள் உற்பத்தி, நன்னெறி சாகுபடி முறைகள் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்களுக்காக ரூ.8.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னை மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.5.30 கோடி செலவில் புதிய தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்பட உள்ளது.மேலும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, மாநிலம் முழுவதும் தென்னை சாகுபடியை விரிவுபடுத்தும் நோக்கில் ரூ.16 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mega jackpot for coconut farmers new coconut processing corporation being formed 5point30 crores Minister Vinoth announcement


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->