Online Rummy: சென்னையில் மருத்துவ மாணவன் த*கொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு பிசியோதெரபி மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் ஏற்பட்டு அதில் அதிகப்படியான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. 

இழந்த பணத்தை மீட்பதற்காக தனது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் அவருடைய தந்தையோ வெறும் ரூ.4000 மட்டுமே கொடுத்த நிலையில் தனது வீட்டின் அறைக்குள் சென்ற தனுஷ் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை.

இதனை அடைத்து வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது தனுஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்து மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical student suicide in Chennai due to online Rummy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->