''தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தொகுதி மக்கள் தோற்கடிக்க வேண்டும்''; சிபிஎம் சண்முகம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாவுள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில், தேர்தல் வஸ்கக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகள் தவிர்த்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளன.

 இதில், மதுராந்தகம் தொகுதியில், பரந்தாமன் (திமுக), கனிதா சம்பத் (அதிமுக), மரகதம் குமரவேல் (தவெக), சுகந்தி (சிபிஎம்) மற்றும் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), சத்தியபாமா (தவெக), லட்சுமணன் (சிபிஐ) மற்றும் கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இன்று மதுராந்தகத்தில் சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவு திரட்டி அக்கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகம் பேசியதாவது;

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதாவது, இயற்கையாகவோ, இயல்பாகவோ இந்தத் தேர்தல் வரவில்லை. இது இந்தத் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தேர்தல் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் அப்படியே தொடர வேண்டும் என்றால், அதனை அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஏதோ அரசியல் ஆதாயம் கருதிதான் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்திருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

ஆனால், அவர்கள் தற்போது பிரச்சாரத்திலும், ஊடகத்திலும் திமுக – அதிமுக இணைய முயன்றதுதான் பிரச்சனை எனச் சொல்லி வருகிறார்கள். அதுதான் பிரச்சனை என்றால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யாமலேயே சுயேட்சை எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்தில் செயல்பட்டிருக்க முடியும் என்றும், ஆகவே 20 நாட்களில் ராஜினாமா செய்தது என்பது பொறுப்பற்ற, எந்தவித நெறிமுறைக்கும் ஒவ்வாத செயல்  என்று கடுமையாக சாடியுள்ளார்.

எனவே தற்போது தவெக சார்பில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் அவரை தொகுதி மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் இதுபோன்ற நபர்கள் தேர்தலில் நிற்பதும், 20 நாட்களில் ராஜினாமா செய்வதும், மீண்டும் தேர்தலில் நிற்பதற்கு ஊக்கம் அளிப்பதாக மாறிவிடும்  என்றும், அதேபோல், தாராபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPMs Shanmugam urges voters in the constituencies to defeat the candidates contesting on behalf of TVK


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->