ஆசிய விளையாட்டு போட்டி: ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவு பெற்ற 48 வீரர்கள் பங்கேற்பு; நீடா அம்பானி வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2026 Asian Games) ஜப்பானின் ஐச்சி மற்றும் நகோயா (Aichi-Nagoya) மாகாணங்களில்  நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவருமான நீதா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு "ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கோட்டை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் இலக்குக் கோட்டை எட்டுவதை நோக்கி கனவு காண முடியும்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் இப்போட்டிகளுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நீதா அம்பானி இந்திய அணி வீரர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது;

''துணிச்சலோடும் மகிழ்ச்சியோடும் களத்தில் போட்டியிடுங்கள். ஏனெனில் நீங்கள் செய்யப்போகும் சாதனைகள் பதக்கங்களை வெல்வதைத் தாண்டி பல நன்மைகளைத் தரும். ஒரு வாய்ப்பு ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றும். ஒரு செயல்முறை ஒரு கனவை உருவாக்கும். ஒரு விளையாட்டு வீரனால் ஒட்டுமொத்த தலைமுறைக்கே ஊக்கமாக அமைய முடியும். இது உங்களுக்கான தருணம், இதைச் சாதனைத் தருணமாக மாற்றுங்கள். ஒட்டுமொத்த நாடும் உங்களுக்காகவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் ஆதரவைப் பெற்ற மொத்தம் 48 விளையாட்டு வீரர்கள் 09 வெவ்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

இதில் இந்தியாவின் முன்னணி விளையாட்டு நட்சத்திரங்களான லவ்லினா போர்கோஹெய்ன், தேஜஸ்வின் சங்கர், ஸ்ரீசங்கர் முரளி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் அடங்குவர்.

அத்துடன், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக விளங்கும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன், களத்திலும் களத்திற்கு வெளியேயும் வீரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக, 'சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்' விளையாட்டு மருத்துவக் குழு (Sports Medicine Team) மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகள் இந்தியக் குழுவோடு இணைந்து வீரர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் பிசியோதெரபி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nita Ambani extends her best wishes to the 48 athletes supported by the Reliance Foundation who are participating in the Asian Games


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->