கொலை மிரட்டல், மிரட்டிப் பணம் பறிப்பு; 'பிக்பாஸ்' பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது; தலைமறைவான 03 பேருக்கு வலைவீச்சு; நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


ஆந்திர தொழிலதிபர் ஒருவடிதம் ரூ.5 லட்சம் மிரட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் 'பிக்பாஸ்' பிரபலம் வர்ஷினி வெங்கட் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் 29 வயதான தருண். இவர் குறும்பட தயாரிப்பு, பைனான்ஸ் மற்றும் பங்குச்சந்தை தொழில்களைச் செய்து வருபவர். தொழில் காரணமாக கடந்த 06 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்துள்ளார்.

கடந்த 05 மாதங்களுக்கு முன்பு தருணுக்கு அவரது நண்பர் நிஷாந்த் என்பவர் மூலமாக பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவருக்கும் நாளைடைவில்  நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. வர்ஷினி வெங்கட்டும் அடிக்கடி தருண் தங்கியிருந்த அறைக்குச் சென்று வந்துள்ளார். மேலும், தான் எடுக்கவுள்ள குறும்படத்துக்கு நிதி உதவி செய்யுமாறும் தருணிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஓட்டல் பாருக்கு தனது நண்பர்களுடன் வந்த வர்ஷினி, வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய தருணைப் பேசுவதற்காக வெளியே அழைத்துள்ளார். அப்போது ஓட்டல் அருகே தருண் பேசிக்கொண்டிருந்தபோது, வர்ஷினியுடன் வந்த அவரது நண்பர் சஞ்சய் மற்றும் சிலர் தருணைத் தாக்கி அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்தைப் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சஞ்சய், தருணைத் தொடர்புகொண்டு, 'உன்னால் வர்ஷினியின் வாழ்க்கை வீணாகிவிட்டது, அவருக்கு உடனடியாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்' என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த தருண், வர்ஷினியின் வங்கிக் கணக்குக்கு ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார். 

அதன் பின்னரும் தருணை மிரட்டிய சஞ்சய், 'சமாதானம் செய்த எனக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும், இல்லையென்றால் வர்ஷினியை வைத்து உன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்' என்று கூறி மேலும் ரூ.2 லட்சத்தைப் பெற்றுள்ளார்.

போதாதற்கு, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதியன்று மீண்டும் தருணைத் தொடர்புகொண்ட சஞ்சய், ''மேலும் ரூ.27 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் சுட்டுக் கொன்றுவிடுவேன்.'' என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தருண், தனது வழக்கறிஞருடன் சென்று கிண்டி காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.

குறித்த புகாரின் அடிப்படையில், கிண்டி காவல் துறையினர் வர்ஷினி வெங்கட், சஞ்சய் உட்பட 04 பேர் மீது கொலை மிரட்டல், மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், வர்ஷினி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தருணை மிரட்டிப் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் துறையினர் வர்ஷினி வெங்கட்டைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சஞ்சய் உள்ளிட்ட 03 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss fame Varshini Venkat arrested


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->