MBA மற்றும் MCA படிப்புகளில் சேர விண்ணப்பம் தொடக்கம் - தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.!
MBA and MCA course apply online
பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் MBA, MCA படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் நடப்பாண்டு கல்வி ஆண்டுக்கான MBA மற்றும் MCA முதுகலை படிப்பிற்கு மாணவர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விரண்டு படிப்புகளுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நேரடியாக இரண்டாம் ஆண்டு BE மற்றும் B.Tech படிப்பில் சேர்வதற்கு ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இரண்டாம் ஆண்டு B.E மற்றும் B.Tech படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும், MBA மற்றும் MCA படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.gct.ac.in, www.tn-mbamca.comஎன்று அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பங்களை ஜூன் 25ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
MBA and MCA course apply online