பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் "மயிலாடுதுறை" மாவட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மதுவிலக்கு ஆயரத்தீர்வைதுறை, வணிகவரித்துறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வேளாண் துறை சார்பாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை இணைக்கும் திருத்த சட்டம் முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல திருத்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய உள்ளார். அதேபோன்று ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை போக்குவரத்து துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. இந்த மசோதாவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டம் முன்வடிவு தாக்கலாகிறது. இதனால் தமிழக முழுவதும் ஆட்டோ கட்டணங்கள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai include protected agricultural zone bill was tabled today in TNassembly


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->