நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
May 19 local holiday to nilgiris district
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நாளை 125 வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. அதன் காரணமாக நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு காணும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் மூன்றாம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
May 19 local holiday to nilgiris district